ஸ்பெயினை வீழ்த்திய இந்தியா... டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கியில் அபார வெற்றி...

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஸ்பெயினுக்கு எதிரான ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஸ்பெயினை வீழ்த்திய இந்தியா... டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கியில் அபார வெற்றி...
குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை 3க்கு 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஸ்பெயினுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் துவக்கம் முதலே இந்திய அணியின் கை ஓங்கியிருந்தது. ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள், முதல் சுற்றிலேயே அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அசத்தினர்.  
 
இதன்பின்னர் ஆட்டத்தை தன்வசப்படுத்த ஸ்பெயின் அணி எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 3க்கு 0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் குருப் ஏ பிரிவில், 4வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.