ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் துவங்கிய இந்தியா..!

முதல் போட்டியிலேயே தென்னாப்ரிக்காவை திணற வைத்த இளம் வீரர்கள்..!

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் துவங்கிய இந்தியா..!

ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் தென்னாப்ரிக்காவுடன் மோதி வெற்றியுடன் துவக்கியுள்ளது இந்திய இளம் அணி. ஐசிசி சார்பில் ஜூனியர் உலகக் கோப்பை தொடரின் 14-வது சீசன் விண்டீசில் நடைபெறுகிறது. 16 அணிகள் மோதும் இந்த தொடரில் பி பிரிவில் இந்திய அணி தனது முதல் மோதலை தென்னாப்ரிக்காவுடன் துவங்கியது. டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா பீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் இந்திய அணி வீரர்கள் பேட்டிங் சென்றனர். துவக்க வீரர்களான ஹர்னூர் சிங், ரகுவன்ஷி இருவரும் ஒரு ரன்னிலும், 5 ரன்களிலும் வெளியேறி அதிர்ச்சியளிக்க, அடுத்து வந்த ரஷீத் 31 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். தொடர்ந்து வந்த வீரர்களில் கேப்டன் யாஷ் துல் அரைசதம் அடித்து அணியின் ரன்குவிப்புக்கு உதவினார். 46.5 ஓவரில் 232 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்திய அணி. 

233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது தென்னாப்ரிக்கா. தென்னாப்ரிக்கா வீரர்களுக்கு பெரும் சவாலாக இருந்தவர் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் விக்கி. இவர் இந்த தொடரில் 5 விக்கெட்கள் எடுத்தார். இந்திய வீரர்களின் பந்து வீச்சில் ரன் எடுக்க முடியாமல் திணறிய தென்னாப்ரிக்க வீரர்கள் 45.4 ஓவரில் 187 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய இளம் வீரர்கள் தங்களது முதல் தொடரையே வெற்றியுடன் ஆரம்பித்திருக்கின்றனர். அதேபோல பி பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அயர்லாந்து அணி, உகாண்டாவை 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சி பிரிவு லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணி பப்புவா நியூ கினியாவை 228 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.