ஆசிய விளையாட்டு போட்டி;  41 பதக்கங்களை வென்ற இந்தியா!

ஆசிய விளையாட்டு போட்டியில்  இன்று நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி இன்றைய தடகளம் மற்றும் துப்பாக்கிச் சுடுதல் ஆண்கள் டிராப் குழு பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதன்  மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை  41 ஆக உயர்ந்துள்ளது. 

19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆசிய விளையாட்டின் தடகள போட்டிகளில் ஒன்றான குண்டு எறிதலில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. இன்று நடந்த ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் 20 புள்ளி மூன்று ஆறு மீட்டர் வீசி இந்திய வீரர் தஜிந்தர் பால் சிங் தங்கம் வென்று அசத்தினார்.

இதேபோல் ஆடவருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் எனப்படு்ம் தடை தாண்டு ஓட்டத்தில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. இப்போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் சாபில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதேபோல் மகளிர் 50 கிலோ எடை பிரிவு குத்துச்சண்டை அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை சுதாமத் ரக்ஷத்திடம் இந்தியாவின் நிக்ஹாத் ஸாரீன் தோல்வியடைந்தார். இதன் மூலம் அவர் வெண்கலப்பதக்கத்துடன் போட்டியிலிருந்து வெளியேறினார்.

கோல்ஃப் விளையாட்டில் தனி நபர் பிரிவில் விளையாடிய இந்திய வீராங்கணை அதிதி அசோக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

முன்னதாக நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் டிராப் பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனைகள் மனிஷா கீர், ப்ரீத்தி ரஜக், ராஜேஸ்வரி குமாரி ஆகியோர் 337 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றனர். 

இதேபோல், ஆடவர் டிராப் பிரிவில் கியான் செனாய், ஜொரவர் சிங், பிரித்வி தொண்டைமான் ஆகியோர் 361 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர். 

இதன் மூலம் 13 தங்கம், 16 வெள்ளி மற்றும் 16 வெண்கலம் என இந்தியாவின் பதக்க எண்ணிக்கை  45 ஆக உயர்ந்துள்ளது. பதக்கப்பட்டியலில் தொடர்ந்து நான்காவது இடத்தில் நீடிக்கிறது. 
 
இதையும் படிக்க : குன்னூர் விபத்து பிரதமர் குடியரசுத் தலைவர் இரங்கல்!