8 பதக்கங்களுடன் வீடு திரும்பிய இந்திய குத்துச்சண்டை வீரர்கள்...

உலக குத்துச்சண்டை தொடரில் இந்தியாவுக்கு 3 வெள்ளிப்பதக்கங்கள் கிடைத்துள்ளன.

8 பதக்கங்களுடன் வீடு திரும்பிய இந்திய குத்துச்சண்டை வீரர்கள்...

பல்கேரியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் அனாமிகா, அனுபமா மற்றும் கோவிந்த் ஆகியோர் வெள்ளி வென்றுள்ளனர். மகளிர் 81 கிலோ எடைப்பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை எம்மாவிடம் பூஜ்ஜியத்திற்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் அனுபமா தோல்வி கண்டார்.

50 கிலோ எடைப்பிரிவில் சீன வீராங்கனை ஹூ மெயி-யிடம் அனாமிகா தோல்வியைத் தழுவினார். இதேபோல், ஆடவர் 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கோவிந்த் சஹானி, உஸ்பெகிஸ்தான் வீரரிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மேலும் படிக்க | 76 வயதில் தடகளம்.... தேசிய போட்டியில் சாதனை செய்த சாமுவேல்!!!

மொத்தத்தில், அனுபமா, அனாமிகா மற்றும் கோவிந்த் வீரர்கள் வெள்ளிப்பதக்கங்களும், கலைவானி, ஷ்ருதி, மோனிகா, சச்சின் மற்றும் நிஸ்வாமித்ரா ஆகியோர் வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளனர்.

இவர்களது வெற்றியைக் கொண்டாடும் வகையில், இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு (Boxing Federation) தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர்களது போட்டோக்களை பதிவிட்டு பெருமை பதிவு போட்டுள்ளது. இதற்கு பலரும் பதில் பதிவிட்டு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | IND VS AUS : 2 வது டெஸ்ட் தொடரிலும் அசத்திய இந்திய அணி...!


ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி பிரமாண்டமான ஆடல் , பாடலுடன் கூடிய கலை நிகழ்ச்சிகளுடன் இன்று நடைபெற உள்ளது. 

10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிக்க : ஜெயலலிதா சகோதரா் எனக்கூறி சொத்தில் பங்கு கேட்டு தொடா்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு...!

இந்நிலையில், இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக 5 முறை ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறை சாம்பியன் பட்டமும் பெற்றுள்ளது. 

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே போட்டி தொடங்கும் முன்பு பிரமாண்டமான முறையில் ஆடல் , பாடலுடன் கூடிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 

2023-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 தொடரில்  மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக யார் களமிறங்க உள்ளார் என்ற கேள்விக்கு அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டியளித்துள்ளார்.

ஐபிஎல் டி-20யில் ஐந்து முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 2023 -ஆம் ஆண்டுக்கான தொடரில் களம் இறங்க உள்ளது. தற்போது  மும்பை அணியின் வேகப்பந்து  வீச்சாளர் பும்ரா   காயம் அடைந்ததன் காரணமாக ஓய்வு பெற்று வருகிறார். பும்ராவுக்கு பதிலாக மாற்று வீரர்  யார் களம் இறங்குவார் என ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்கள்  மத்தியில் மிகுந்த  எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ளது .

இதற்கு பதிலளித்தமும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பும்ரா இல்லாதது எங்கள் அணிக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.  தற்போது பும்ராவுக்கு பதிலாக யாரைக் களமிறக்கலாம் என  ஆலோசித்து வருவதாக  தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து பேட்டியளித்த அவர் கடந்த சீசனில் காயம் ஏற்பட்டதன் காரணமாக விளையாட்டில் பங்கேற்காத வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் தற்போது நல்ல உடல் தகுதியுடன் இருப்பது எங்களுக்கு உற்சாகம் அளிப்பதாக தெரிவித்தார்.

-முருகானந்தம் 

இதையும் படிக்க :எந்த ஒரு நீதிமன்றமும் தனக்கு எதிராக தீர்ப்பளிக்க முடியாது


 

 

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சத்திற்கு சென்று சாதனை படைக்க இரு்ககும் தமிழக பெண் என். முத்துச்செல்விக்கு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை  அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ரூபாய் 10 லட்சம் காசோலையை  நிதியுதவியாக  வழங்கியுள்ளா். 

சென்னையை சோ்ந்த என் முத்து செல்வி உலகிலேயே மிகவும் உயரமான 8,848 மீட்டா் கொண்ட எவரெஸ்ட் சிகரத்துக்கு செல்ல ஏசியன் டிராக்கிங் இன்ட்டா் நேஷனல் நிறுவனம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இதனை அடுத்து அவா் நேபாளத்தின் தலைநகா் காத்மண்டுவில் இருந்து  புறப்படுவதாக செய்திகள் தொிவிக்கின்றன.

பள்ளி நாட்களில் தடகள விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட என். முத்து செல்வி கடந்த 2021-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த மகளிா் தின விளையாட்டு போட்டியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மலைப்பட்டு மலையில் 155 அடி உயரத்தில் இருந்து  கண்ணைக் கட்டிக்கொண்டு கீழே இறங்கினாா்.மேலும் இது போன்று  பல சாதனைக்கு சொந்தக்காரா் அவா்.

இந்நிலையில்  என்.  முத்து செல்வி   நேபாள அரசின் ஒத்துழைப்புடன் செல்லும் இந்த பயணத்துக்கு  நிதியுதவி வேண்டி  கேரிக்கை விடுத்திருந்தாா்.இந்த  கேரிக்கையை ஏற்று  இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ரூபாய் 10 லட்சம் காசோலையை  நிதியுதவி வழங்கியுள்ளாா்.

-முருகானந்தம்

இதையும் படிக்கராகுல் தகுதி நீக்கம்... ஜெர்மனி கண்டனம்!

பேட்மிண்டன் தரவாிசை பட்டியலில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளாா். பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டாப்-10 இடங்களில் எந்தவித மாற்றமும் இல்லை. ஒலிம்பிக் சாம்பியனான டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென் முதலிடத்திலும், இந்திய வீரர் பிரனாய் 9-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.  பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சி முதலிடத்தில் தொடா்கிறார். சமீபத்தில் நடந்த சுவிஸ் ஓபன் போட்டியில் 2-வது சுற்றில் தோல்வி கண்ட இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 2 இடம் சரிந்து 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர். 

16வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் திருவிழா வருகிற 31 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்குகிறது. இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், 10 அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

அதன்படி அகமதாபாத் மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்திலேயே குஜராத் டைட்டன்ஸ் உடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ள நிலையில் சிஎஸ்கே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

இதையும் படிக்க : நாடாளுமன்றத்தில் பூகம்பமாக வெடித்த ராகுல்காந்தி விவகாரம்...  இருஅவைகளும் ஒத்திவைப்பு!

இந்நிலையில் 10 அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள 70 லீக் ஆட்டங்களில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் 7 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளதையடுத்து, இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விலை ஆயிரத்து 500 ரூபாய் முதல் இரண்டாயிரத்து 500 ரூபாய் வரை, ஆன்லைன் மற்றும் நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று காலை 9:30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில், டிக்கெட் வாங்குவதற்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்த ரசிகர்கள் நள்ளிரவு முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர். சென்னை சேப்பாக்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் போட்டி நடைபெறுவதால், தோனி, ஜடேஜா உள்ளிட்ட சென்னை வீரர்களை காண ஆவலுடன் காத்திருப்பதாகவும் ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்தனர்.