போட்டியின் நடுவில் கீழே விழுந்த சைக்ளிஸ்ட் மீனாட்சி; வீடியோ வைரல்:

காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற இந்திய மிதிவண்டி வீரர் மீனாட்சி, கீழே விழுந்தார். பின், போட்டியாளர் வண்டி அவர் மேல் ஏறி பலத்த காஅயம் ஏற்பட்டதால், போட்டியில் அவரால் தொடர முடியவில்லை.
போட்டியின் நடுவில் கீழே விழுந்த சைக்ளிஸ்ட் மீனாட்சி; வீடியோ வைரல்:
Published on
Updated on
1 min read

நேற்று நடந்த காமன்வெல்த் போட்டிகளின் மிதிவண்டி போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர் மீனாட்சி, விபத்துக்குள்ளானார். தற்போது நடந்து வரும் இந்த சர்வதேச போட்டிகளில் நடந்த இந்த பயங்கரமான விபத்து, வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

10 கி.மீ ஸ்க்ராட்ச் பந்தயத்தில், பங்கேற்ற இந்திய மிதிவண்டி வீரர் மீனாட்சி, வளைவுகளில் ஓட்டும்போது, சறுக்கி விழுந்தார். பிந்தொடர்ந்த மற்றொரு போட்டியாளர் நியூசீலாந்தைச் சேர்ந்த ப்ரியோனி போதா (Bryony Botha), தனக்கு முன் இருந்த மீனாட்சி மீது மோதினார். மேலும், அவரது வண்டி, மீனாட்சி மேல் ஏறியதால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் மோதி இருவருக்கும் பலத்தக் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது. மேலும், இந்த போட்டியில், இங்கிலாந்தைச் சேர்ந்த லாரா கென்னி தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com