அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்...!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்...!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ஜோகோவிச், ரோஹன் போபண்ணா இணை அரையிறுதி போட்டிக்கு முன்னேறினர். 

நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை, அமெரிக்காவின் ஜாக்சன் வித்ரோ, நதானியேல் லாம்மன்ஸ் இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரோஹன் போபண்ணா இணை 7-6  6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

Rohan Bopanna (L) and Novak Djokovic

இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் செர்பியாவின் முன்னணி வீரர் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-1, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் ரோம் நாட்டு வீராங்கனை சொரானா சிர்ஸ்டியா, செக் குடியரசின் கரோலினா முச்சோவாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற  கரோலினா அரையிறுதிக்குள் நுழைந்தார்.

இதையும்   படிக்க   |  ஏமாத்திட்டாங்கன்னு திமுக பிரமுகர்கிட்ட உதவி கேட்டா ,.. அவரும் இப்படி ஏமாத்திட்டாரே..? கதறும் சினிமா பிரபலம்.