நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு...

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு...

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 325 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 62 ரன்களில் அனைத்து விக்கெட்டு களையும் இழந்து பாலோ-ஆன் ஆனது. ஆனால் 263 ரன்கள்  முன்னிலை பெற்றிருந்த நிலையில், இந்திய அணி பாலோ-ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி, விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் சேர்த்தது.

3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த நிலையில், அடுத்து வந்த வீரர்களும் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இந்நிலையில், 7 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி, 276 ரன்கள் எடுத்திருந்தபோது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணி,  2 இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தமாக 539 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.  

540 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 5  விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்சில் அஷ்வின் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 

நியூஸிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 400 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 5  விக்கெட்கள் அந்த அணிக்கு உள்ளன. இன்னும் 2 நாட்கள் ஆட்டம் பாக்கி இருப்பதால் தற்போதைய நிலையில் இந்தியா அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.