சர்வதேச அலைச்சறுக்கு : சாம்பியன்ஷிப் வென்றார்,.. ஜப்பான் வீராங்கனை சாரா வக்கிடா...!

சர்வதேச அலைச்சறுக்கு : சாம்பியன்ஷிப் வென்றார்,.. ஜப்பான் வீராங்கனை சாரா வக்கிடா...!

சர்வதேச அலைச்சறுக்கு போட்டியின் மகளிர் பிரிவில் ஜப்பானின் சாரா வக்கிடா சாம்பியன் பட்டம் வென்றார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியா தரப்பில் 15 வீரர்கள் உட்பட தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா, வங்கதேசம், மியன்மார், உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சர்வதேச அலைச்சறுக்கு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற  மகளிர் பிரிவில் ஜப்பானின் சாரா வக்கிடா சக நாட்டு வீராங்கனையான ஷினோ மட்சுடாவை வீழ்த்தி சாம்பியன் வென்றார்.

இதையும் படிக்க   |  இன்று தொடங்குகிறது,.... உலக தடகள சாம்பியன்ஷிப்...!