'சிஎஸ்கே அணி'... சுரேஷ் ரெய்னா-வை எடுக்காததற்கு இது தான் காரணமா..? ரசிகர்கள் ஏற்பார்களா.!!

ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி சுரேஷ் ரெய்னாவை எடுக்கவில்லை.. இது சிஎஸ்கே ரசிகர்களை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
'சிஎஸ்கே அணி'... சுரேஷ் ரெய்னா-வை எடுக்காததற்கு இது தான் காரணமா..? ரசிகர்கள் ஏற்பார்களா.!!
Published on
Updated on
1 min read

ஐபிஎல் தொடரில் 2008ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் சுரேஷ் ரெய்னா. மொத்தம் இதுவரை நடைபெற்றுள்ள 14 சீனில் 12ல் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடினர் சுரேஷ் ரெய்னா..

இதனாலையே ரசிகர்கள் இவரை சின்ன தல என்று அழைத்து வருகிறார்கள். 2008ஆம் ஆண்டு நடைபெற்ற முதல்  ஐபிஎல் சீசனில் 421 ரன்கள் எடுத்தார். அதன்பின் இரண்டாவது சீசனில் 434 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் சீசன் 2014 வரை சிஎஸ்கே அணிக்காக அனைத்து சீசன்களிலும் சிறப்பாக விளையாடி ரசிகர்களை கவர்ந்தவர் சுரேஷ் ரெய்னா.

2017ஆம் ஆண்டு முதல் இவரின் ஆட்டம் சரிய தொடங்கியது, 17 போட்டிகளில் விளையாடி 383 ரன்கள் மட்டுமே எடுத்தார். பிறகு 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சொந்த காரணங்களுக்காக விளகினார்.

மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மொத்தம் 160 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் கூட ரெய்னாவுக்கு பதிலாக ராபின் உத்தப்பா இறுதிப் போட்டியில் களமிறங்கினார்.  இதன் காரணமாகவே சிஎஸ்கே அணி இந்த ஐபிஎல் தொடரில்  சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com