ஐபிஎல்- 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்- 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

ஐபிஎல் போட்டியின் 41 லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதனையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினர்.கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் டெல்லி அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்


கொல்கத்தா அணியின் அபார பந்துவீச்சால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடியது. 


கொல்கத்தாவின் தொடக்க வீரரான வெங்கடேஷ் 14 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி  சுப்மன் கில் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆனால்  நிதிஷ் ராணா நிலையாக நின்று விளையாடி கொல்கத்தா அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.   கொல்கத்தா அணி 18.2 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்து 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.