ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பையை முட்டி தள்ளியது கொல்கத்தா அணி

வெங்கடேஷ் அய்யர், ராகுல் திரிபாதி ஆகியோரின் வெறித்தனமான ஆட்டத்தால், 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பையை முட்டி தள்ளியது கொல்கத்தா அணி

வெங்கடேஷ் அய்யர், ராகுல் திரிபாதி ஆகியோரின் வெறித்தனமான ஆட்டத்தால், 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 34-வது லீக் ஆட்டம், அபுதாபியில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஆனால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாத காரணத்தால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களே எடுத்தது.

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 13 ரன்களில் ஆட்டமிழக்க, வெங்கடேஷ் அய்யருடன், ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தார். அதிரடியில் மிரட்டிய இந்த ஜோடி, மும்பை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் மும்பை அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினர். வெறித்தனமாக ஆடிய வெங்கடேஷ் அய்யர், 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் தெறிக்க விட்ட திரிபாதி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்தார். 15 புள்ளி 1 ஒவர்களில் கொல்கத்தா அணி, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்தது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.