சிறந்த வீரருக்கான விருதை பெற்றார் லியோனல் மெஸ்ஸி!!

சிறந்த வீரருக்கான விருதை பெற்றார் லியோனல் மெஸ்ஸி!!

Published on

அர்ஜென்டினாவை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி உலகின் மிக சிறந்த வீரர்களில் ஒருவர் ஆவார்.  35 வயதான மெஸ்சி கடந்த ஆண்டு பிபா உலக கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். இந்நிலையில், உலகின் சிறந்த விளையாட்டு வீரருக்கான லாரஸ் விருதை பாரிஸில் நடந்த விழாவில் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.  அதைபோல உலகின் சிறந்த அணிக்கான லாரஸ் விருது அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு வழங்கப்பட்டுள்ளது.  

லாரஸ் விருதை 2-வது முறையாக லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com