தோனி பார்த்து ரசித்த கடைசி பந்து சிக்சர்..! - வைரலாகும் புகைப்படம்

சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில், தமிழ்நாடு அணி விளையாடிய கடைசி ஓவரை, எம்.எஸ்.தோனி பார்த்து ரசித்துள்ளார்.

தோனி பார்த்து ரசித்த கடைசி பந்து சிக்சர்..! -  வைரலாகும் புகைப்படம்

சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில், தமிழ்நாடு அணி விளையாடிய கடைசி ஓவரை, எம்.எஸ்.தோனி பார்த்து ரசித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கர்நாடக அணியை வீழ்த்தி, தமிழ்நாடு அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றி உள்ளது.

கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலை உருவான நிலையில், தமிழக அணி வீரர் ஷாருக்கான் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அசத்தினார். இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் தமிழக அணி திரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி விளையாடிய கடைசி ஓவரை, இந்திய அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனி பார்த்துள்ளார். இந்த புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.