ஏழை குழந்தைகளை ஐபிஎல் பார்க்க அழைத்துச் சென்ற அமைச்சர்...!

ஏழை குழந்தைகளை ஐபிஎல் பார்க்க அழைத்துச் சென்ற அமைச்சர்...!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை காண தனது தொகுதியை சேர்ந்த ஏழை குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளார்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் கிரிக்கெட் விளையாட்டின் மீது தீராத ஆர்வமும், திறமையும் கொண்ட பள்ளி மாணவ மாணவியர்கள் ஏராளாமானோர் உள்ளனர். எளிய குடும்பப் பின்னணியை சேர்ந்த இம்மாணவர்கள் IPL கிரிக்கெட் போட்டிகளை காண போதுமான பண வசதியை கொண்டிருக்கவில்லை. ஆனாலும் அவர்களின் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை பாராட்டும் விதத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஐபிஎல் டிக்கெட்டுகளை வாங்கித் தந்து போட்டிகளைக் காண உதவி வருகிறார்.

சேப்பாக்கம் மைதானத்தில் நிகழும் ஐபிஎல் போட்டிகளை நேரில் காண ஏதுவாக  வட்டம் வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவர், சிறுமியருக்கு ஐபிஎல் டிக்கெட்டுகளை வாங்கித் தருவதுடன் தன்னுடனேயே மைதானத்திற்கு அழைத்துச் சென்று ஆட்டத்தை கண்டு மகிழ்கிறார்.

அந்த வகையில், சேப்பாக்கம் வட்டம் 119-ஐ சேர்ந்த 150 சிறுவர்-சிறுமியர்கள் அமைச்சர் உதயநிதியுடன் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையேயான ஐபிஎல் போட்டியை கண்டு மகிழ்ந்தனர்.

இதையும் படிக்க:‘தி கேரளா ஸ்டோரி’ வங்கத்தில் தடை...! அதிரடி காட்டுமா தமிழ்நாடு. கேரளா...?