மில்கா சிங் மறைவுக்கு இரங்கல்: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.  

மில்கா சிங் மறைவுக்கு இரங்கல்: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நேற்று தொடங்க இருந்தது.

தொடர் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், 2-வது நாளான இன்று மழை பெய்யாததால், ஆட்டம் நடைபெற சாதகமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, டாஸ் வென்ற  நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

 இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் சிகிச்சை பலனின்றி காலமான செய்தி வீரர்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து மில்கா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.