விளையாட்டு
புஷ்பா ஸ்டைலில் வெற்றியை கொண்டாடிய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை... வைரலாகும் வீடியோ..!
புஷ்பா ஸ்டைலில் வெற்றியை கொண்டாடிய நேபாள மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு நடனமாடி அசத்தியிருந்தார்.
புஷ்பா படத்தில், தாடையை தடவி அல்லு அர்ஜுன் செய்த செய்கை வெற்றியின் அடையாளமாகவே போற்றப்படுகிறது. இதனை பலரும் தங்களது வெற்றியை வெளிப்படுத்த பயன்படுத்துகின்றனர்.
அதன்வரிசையில் தற்போது நேபாள மகளிர் கிரிக்கெட் அணி-யின் வீராங்கனை சீதா ராணா மகாரும் இணைந்துள்ளார். தனது அதீத பந்துவீச்சால் எதிரணியை தோற்கடித்து மகிழ்ச்சியை புஷ்பா பட பாணியில் வெளிப்படுத்தும் இவரது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.