கொரோனா இல்லையா? அப்போ போகலாம்...

கொரோனா இல்லையா? அப்போ போகலாம்...

ஜப்பானில் ஒலிம்பிக் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயமாக்க அந்நாட்டு அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. ஜப்பானில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலை அதிதீவிரமாக இருப்பதால் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படுமா இல்லையா என்ற விவாதம் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. 

ஒலிம்பிக் போட்டியை காண வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளூர் பார்வையாளர்களை அனுமதிப்பதா, இல்லையா, அனுமதிக்கப்பட்டால் என்ன என்ன நிபந்தனைகளின் கீழ் அவர்களை அனுமதிப்பது என்பது குறித்த ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியை காண வரும் உள்ளூர் ரசிகர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என்ற பரிசோதனை சான்றிதழை கட்டாயமாக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.