கோலியை கடுப்பாக்கிய பாகிஸ்தான் நிருபர்:  ”உலகம் முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை” கோபமாக பதிலளித்த கேப்டன் விராட்

பாகிஸ்தான் அணி வென்றுவிட்டதால் எனக்கும், இந்திய அணிக்கும் இந்த உலகம் முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர் சந்திப்பில் ஆவேசமாக கூறினார்.

கோலியை கடுப்பாக்கிய பாகிஸ்தான் நிருபர்:  ”உலகம் முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை” கோபமாக பதிலளித்த கேப்டன் விராட்

துபாயில் நேற்று  டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, விக்கெட் இழப்பின்றி, 17.5 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதுவரை 50 ஓவர்கள், டி20 உலகக் கோப்பையில் 12 முறை இந்திய அணியை எதிர்கொண்டு தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, முதன் முறையாக இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 1992ம் ஆண்டிலிருந்து இந்திய அணியை உலகக் கோப்பைப் போட்டியில் சந்தித்துவரும் பாகிஸ்தான் இதுவரை ஒருமுறைகூட வெல்லமுடியாமல் பெரும் சுமையாக சுமந்துவந்ததை பாபர் ஆஸம் மூலம் தீர்க்கப்பட்டது.

இந்த போட்டிக்குப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட்  இந்திய அணிக்கு அதீதமான தன்னம்பிக்கையுடன் இருந்ததும் பாகிஸ்தான் அணியின் திறமை குறித்தும் ஆலோசிக்காமல் இருந்தது, தோல்விக்கு காரணமாக என்று பாகிஸ்தான் ஊடகத்தினர் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஆவேசமாக பதில் அளித்த கோலி, இன்று நடந்த போட்டி மிகச்சிறந்தது என உங்களுக்குத் தெரியும். வெளியிலிருந்து யார் வேண்டுமானாலும் ஆலோசனைகள் தரலாம். என்னுடைய விருப்பமெல்லாம் களத்துக்கு வாருங்கள், பேட், பேட், ஹெல்மெட் அணிந்து விளையாடிப் பாருங்கள் என்ன அழுத்தம் இருக்கிறது எனத் தெரியும் என கூறினார்.

எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது, குறிப்பாக பாகிஸ்தானை எளிதாக எடுக்க முடியாது. இன்றுள்ள சூழலில் உலகில் எந்த அணியையும் வீழ்த்தும் திறமை கொண்டது. இந்த ஆட்டத்துக்கு நாங்கள் மதிப்பளிக்க வேண்டும். இந்த ஒரு போட்டியில் கிடைத்த வெற்றியால் இந்த உலகமே எனக்கும், இந்திய அணிக்கும் முடிந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை என்றார்.இந்த ஆட்டம் போட்டித் தொடரின் முதல் ஆட்டமேத் தவிர கடைசி ஆட்டம் கிடையாது என விராட் கோலி தெரிவித்தார்.