ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் பூஜா ராணி தங்கம் வென்று அசத்தல்...

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் பூஜா ராணி தங்கம் வென்று அசத்தல்...

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் பூஜா ராணி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஆசிய குத்துச்சண்டை போட்டி டெல்லியில் மே 21 முதல் 31 வரை நடைபெறுவதாக இருந்தது. கொரோனா தொற்று காரணமாக துபாய்க்கு மாற்றப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள இந்தியாவின் பூஜா ராணி துபாயில் நடைபெற்று வரும் ஆசிய குத்துசண்டை  போட்டியில் 75 கிலோ பிரிவில் தங்கம் வென்றுள்ளார். இறுதிச்சுற்றில் உஸ்பெகிஸ்தானின் மெளலோனாவை 5-0 என்கிற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். இதற்கு முன்பு 2019-ல் நடந்த போட்டியிலும் 81 கிலோ பிரிவில் பூஜா ராணி தங்கம் வென்றிருந்தார்.  இந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் ஒரு தங்கம், மூன்று வெள்ளி, ஆறு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்கள்.

மற்றோரு போட்டியில் 6 முறை உலக சாம்பியனான மேரி கோம், 51 கிலோ எடைப் பிரிவில் கஜகஸ்தான் வீராங்கனையான நசீமை எதிர்கொண்டார்.தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நசீம் 3க்கு 2 என்ற கணக்கில் மேரி கோமை வீழ்த்தி தங்கம் பதக்கம் வென்றார்.தன்னைவிட 11 வயது குறைவான நசீமிடம் போராடி வீழ்ந்த மேரி கோம் வெள்ளிப் பதக்கம் வென்றார்.