ஃபிஃபா உலகக்கோப்பை...இன்று எந்தெந்த போட்டிகள் மோதுகிறது...பட்டியல் இதோ!

ஃபிஃபா உலகக்கோப்பை...இன்று எந்தெந்த போட்டிகள் மோதுகிறது...பட்டியல் இதோ!

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து, ஈரான் அணிகள் மோதுகின்றன. இதேபோல் செனகல் அணி, நெதர்லாந்தையும், அமெரிக்கா, வேல்ஸ் அணியையும் எதிர்கொள்ள உள்ளது.

தோல்வியை சந்தித்தது கத்தார் அணி:

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. அதன்படி, நேற்று நடைபெற்ற முதல் போட்டியில், ஈகுவடார் அணி, கத்தார் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றிலேயே, முதல் முறையாக தொடரை நடத்தும் நாடு தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள்:

இந்த நிலையில், உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இரண்டாவது நாளான இன்று, இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அந்தவகையில், மாலை 6:30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, ஈரான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி, கலிஃபா சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. 

இதையும் படிக்க: தேசத்தின் வளர்ச்சிக்கு...இதன் வளர்ச்சி மிக முக்கியமானது...முதலமைச்சர் பேச்சு!

இதே போல் இரவு 9:30 மணிக்கு தொடங்கும் இரண்டாவது போட்டியில், செனகல் அணி நெதர்லாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த போட்டி, அல் துமாமா சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.

அதேபோல், இரவு 12 முப்பது மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் அமெரிக்கா மற்றும் வேல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்திய நேரப்படி இந்த போட்டியானது நாளை என்ற கணக்கில் தான் வரும் என்பதால், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் என்று குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.