பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர்.. ரபேல் நடால், ஜோக்கோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் பிரெஞ் ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச்சும், முன்னணி வீரரான ரபேல் நடாலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர்.. ரபேல் நடால், ஜோக்கோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!!

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டியில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியின் முதல் சுற்றில் முன்னணி வீரரான ரபேல் நடால் ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டனை 6-2, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 

நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோக்கோவிச் கொரோனா தடுப்பூசி போடாத காரணத்தினால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. இதையடுத்து இத்தாலி ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற ஜோகோவிச், கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நடாலின் சாதனையை சமன் செய்யும் நோக்கத்துடன் பிரெஞ்சு ஓபன் தொடரில் பங்கேற்றுள்ளார். முதல் சுற்றில் ஜப்பான் வீரர் யோஷிஹிடோ நிஷிகாவை  6-3, 6-1, 6-0 என்ற கோல்கனக்கில் வீழ்த்தி ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.