"என் வாழ்வின் பெரும் பகுதி ஒன்று இன்று இல்லாமல் போய்விட்டது" தேம்பி தேம்பி அழுத ரிக்கிப் பாண்டிங்!!

மாரடைப்பால் உயிரிழந்த ஷேன் வார்னே குறித்து பேசிய ரிக்கிப் பாண்டிங் திடீரென தேம்பி தேம்பி அழுதது, பார்ப்பவர்கள் மனதை கலங்கவைத்துள்ளது.

"என் வாழ்வின் பெரும் பகுதி ஒன்று இன்று இல்லாமல் போய்விட்டது" தேம்பி தேம்பி அழுத ரிக்கிப் பாண்டிங்!!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக விளங்கும் ஷேன் வார்னே கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

வார்னின் திடீர் மறைவு கிரிக்கெட் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், உலகம் முழுவதும் உள்ள மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வார்னே 15 வருட வாழ்க்கையில் மொத்தம் 145 டெஸ்டில் விளையாடி 708 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் ஒரு சிறந்த லோயர்-ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் இருந்தவர். ஷேன் வார்னே மறைவு கிரிக்கெட் உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சச்சின், மைக்கேல் வாகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் மனமுடைந்து பேசினர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியில் ஷேன் வார்னேவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த முன்னாள் வீரர் ரிக்கிப்பாண்டிங் கண்ணீர் மல்க பேசியுள்ளார். அதில், என் வாழ்வின் பெரும் பகுதி ஒன்று இன்று இல்லாமல் போய்விட்டது. இதை வார்த்தைகளில் சொல்வது கடினம். நான் 15 வயதில் அகாடமியில் அவரை முதன்முதலில் சந்தித்தேன். அவர் எனக்கு என் புனைப்பெயரைக் கொடுத்தார். நாங்கள் எல்லா உயர்வையும் தாழ்வையும் ஒன்றாகச் சவாரி செய்தோம். அவர் எப்போதும் தன்னை பற்றி யோசிக்காமல் தனது அணி வீரர்கள் பற்றி தான் யோசிப்பார்.

என் வாழ்க்கையில் என்னுடன் விளையாடிய சிறந்த பந்து வீச்சாளர் வார்னே தான், எனக்கு எதிராக விளையாடிய சிறந்த பந்து வீச்சாளர் வார்னே தான். அந்த மன்னனின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று பேசி கொண்டிருந்த போதே ரிக்கிப்பாண்டிங் தேம்பி தேம்பி அழுக தொடங்கினார். இதனை பார்த்த ரசிகர்கள் மனம் உருகி வருந்தினர். வார்னே இறந்துவிட்டார் என்ற செய்தி, குறிப்பாக இன்று காலை எழுந்ததும், ஒரு கனவாகவே கருதப்பட்டது என கூறினார் ரிக்கிப்பாண்டிங். இதுவே அவர்களின் நட்புக்கு ஒரு சிறந்த சான்று.

ஷேன் வார்னே எப்படி உயிரிழந்தார் என்பதில் இன்னும் மர்மம் விலகவில்லை. மேலும் அவர் இறந்து கிடந்த விடுதியில் அவரின் அறையில் ரத்தங்கள் இருந்ததாகவும், அவர் பயன்படுத்திய பொருள்கள் சில வற்றில் ரத்த கறைகள் இருந்ததாகவும் தாய்லாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால், அவரின் மரணம் குறித்த உண்மை காரணம் விரைவில் தெரியவரும் என எதிர்பாக்கப்படுகிறது.