டோக்கியோ ஒலிம்பிக்... வீராங்கனைகளை அதிக அளவில் அனுப்பிய ரஷ்யா, அமெரிக்கா...

பாலின சமத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் ஒலிம்பிக் போட்டிக்கு அதிக எண்ணிக்கையில் வீராங்கனைகளை அனுப்பி வைத்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்... வீராங்கனைகளை அதிக அளவில் அனுப்பிய ரஷ்யா, அமெரிக்கா...
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒலிம்பிக் போட்டியானது டோக்கியோவில் வருகிற 23-ம் தேதி கோலாகலமாக தொடங்கவுள்ளது. முன்னதாக இந்த போட்டி விவரங்களை அறிவித்த ஒலிம்பிக் குழு, ‘பாலின சமத்துவத்தை’ கருப்பொருளாக கொண்டு இந்த போட்டி நடைபெறவுள்ளதாகவும், துவக்க நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாடுகளும் ஒரு வீரர் மற்றும் ஒரு வீராங்கனையை அந்நாட்டு கொடியுடன் அணி வகுக்க செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.
 
இந்தநிலையில், டோக்கியோ வந்துள்ள வீரர்களில், அதிக எண்ணிக்கையில் பெண் வீராங்கனைகளே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, கனடா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆண் வீரர்களை விட பெண் வீராங்கனைகளையே அதிகம் அனுப்பியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.