காலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து... ஹாங்காங் வீராங்கனையை வீழ்த்தினார்...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றுள்ளார்.

உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியில், காயம் காரணமாக அவதிப்படும் ஆல் ரவுண்டர் அக்சர் படேலுக்கு பதிலாக அஷ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆசிய கோப்பை போட்டியின்போது அக்சர் படேலுக்கு காயம் ஏற்பட்டது.
உலக கோப்பையில் பங்கேற்கும் அணிகள் 15 பேர் அடங்கிய இறுதி அணியை அறிவிப்பதற்கான கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இந்திய அணியில் அக்சர் படேலுக்கு பதிலாக அஷ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
அக்சர் பட்டேல் முழுமையாகக் குணமடைய 3 வாரம் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து அஷ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆசிய விளையாட்டுப் போட்டி பதக்கப்பட்டியலில் 25 பதக்கங்களுடன் இந்தியா 5வது இடம்
ஆசிய விளையாட்டு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியில் 10 மீட்டர் 'ஏர் பிஸ்டல்' துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இந்திய விரர்கள்
அர்ஜூன் சீமா, சரப்ஜோத் சிங், ஷிவா நர்வால் ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றது.
ஆசிய விளையாட்டு 'வுஷூ' போட்டியில் இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். மகளிருக்கான 60 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டு குதிரையேற்ற போட்டியில் இந்தியாவின் அனுஷ் அகர்வால் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 73 புள்ளி 30 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். குதிரையேற்றம் போட்டியில் இந்த அணி ஏற்கனவே தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
குத்துச்சண்டை 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜெய்ஸ்மின் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சவுதி அரேபிய வீராங்கனை ஹதீல் கஸ்வானை வீழ்த்தினார். மேலும், 71 கிலோ எடைப்பிரிவில் வியட்நாம் வீரர் பிடி புய்யை தோற்கடித்து இந்தியாவின் நிஷாந்த் தேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
டென்னிஸ் கலப்பு இரட்டையர் காலிறுதி சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபன்னா, ருதுஜா போசலே இணை கஜகஸ்தான் நாட்டின் க்ரிகோரி லோமகின் மற்றும் ஜிபேக் குலம்பயேவா இணையை எதிர்கொண்டது. இதில் 7-5,6-3 என்ற நேர் செட் கணக்கில் இந்திய இணை வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணிக்கு ஒருபதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
டேபிள் டென்னிசில் ஆடவர் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற ரவுண்ட் ஆப் 32 சுற்றில் இந்திய வீரர்கள் மானவ் விகாஷ் - மனுஷ் ஷா இணை 3-1 என்ற கணக்கில் மாலத்தீவு இணையை வென்றனர்.
இதே போல் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ரவுண்ட் ஆப் 32 சுற்றில், நேபாள வீராங்கனை நபிதா ஷ்ரேஸ்தாவை 4-0 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா, தோற்கடித்தார்.
ஆடவர் ஹாக்கி போட்டியில் குரூப் ஏ பிரிவில் இந்தியாவும் ஜப்பானும் மோதின. இதில் 4-2 என்ற கணக்கில் ஜப்பானை இந்திய அணி வீழ்த்தியது.
பதக்கப் பட்டியலில் 85 தங்கம் உட்பட 160 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்திலும், 21 தங்கம் உட்பட 79 பதக்கங்களுடன் கொரியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. 6 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களுடன் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.
இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழு : உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு..!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இருப்பினும் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. 3 வது போட்டி ரோஹித் சர்மா தலைமையில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஆஸிதிரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 96 ரன்களும், ஸ்மித் 74 ரன்களும், லபுஷேன் 72 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, வாஷிங்டன் சுந்தர் தொடக்க வீரராக களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 81 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி 56 ரன்களில அவுட்டானார். இறுதியில் 49 புள்ளி 3 ஓவர் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றறது.
தொடரினை இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றாலும் ஆஸ்திரேலிய அணி வெற்றியுடன் இந்த தொடரை முடித்தது. இந்நிலையில் வரும் அக்டோபர் 8ஆம் தேதி சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா.- இந்திய அணி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க || மணிப்பூரை, பதற்றமிக்க மாநிலமாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம்!!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் கிாிக்கெட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் 105 ரன்களும், சுப்மன் கில் 104 ரன்களும், சூர்யகுமார் 72 ரன்களும், கேஎல் ராகுல் 52 ரன்களும் குவித்தனர்.
இதையடுத்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆஸ்திரேலிய அணி வீரா்கள் களமிறங்கினா். அந்த அணி 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. சுமாா் 1 மணி நேரத்திற்கு மேல் ஆட்டம் நிறுத்தப்பட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டு 33 ஓவரில் 317 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 28 புள்ளி 2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இதன்படி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது.
இதையும் படிக்க: "உரிமைத் தொகையை கொள்ளையடிக்கும் பாஜக ஆட்சி" முதலமைச்சர் குற்றச்சாட்டு!
ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் இந்தியா 3 வெள்ளி உட்பட 5 பதக்கங்களை வென்றுள்ளது.
சீனாவின் ஹங்சோவ் நகரில் 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று அதிகாரப் பூர்வமாக தொடங்கியது.
துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் மெஹூலி கோஷ் மற்றும் ஆஷி சௌக்சே ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். இதே பிரிவில் மற்றொரு வீராங்கனை ரமிதா ஜிண்டால் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதேபோல், லைட் வெயிட் துடுப்புப் படகு போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அர்ஜூல் லால் மற்றும் அரவிந்த் சிங் இருவரும் சிறப்பாக விளையாடி வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். எட்டுபேர் பங்கேற்கும் பிரிவிலும் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இதேபோல், பாபுலால் யாதவ் மற்றும் லேக் ராம் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.
இருபது ஓவர் மகளிர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியுடன் மோதிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.
இதனிடையே, ஆசிய விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள ரோபோட்டிக் சின்னங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளன. சென்சென், காங்காங், மற்றும் லியான்லியான் ஆகிய மூன்று ரோபோ சின்னங்கள் ஹங்சௌ நகரின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: கடலூரில் முதல் முறையாக ’நம்ம ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி...குஷியில் பொதுமக்கள்!