இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி... 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி...
இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வீட்டில் தனியாக வீடியோ கேம் விளையாடிய கல்லூரி மாணவர் திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த காலிவாரி கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் தீபன் ( வயது 18 ). இவர் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஇ., படித்து வருவதாக கூறப்படுகிறது.
வீட்டில் தனியாக உள்ள போது இரவு பகல் பார்க்காமல் அதிகளவில் வீடியோ கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இவரது தந்தை இறந்த நிலையில் அண்ணன் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.
தாய் மற்றும் இவர் வீட்டில் உள்ள நிலையில் இவர் வீட்டில் தனியாக வீடியோ கேம் விளையாடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வரை நன்றாக இருந்த தீபன் திடீரென்று இன்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போன்று நடந்து கொண்ட சம்பவம் வீட்டில் இருந்த அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவரை அவரது தாய் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். மேலும் அவருக்கு அங்கே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் தனியாக வீடியோ கேம் விளையாடிய மாணவன் திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | இளம்பெண்ணுக்கு உதவி செய்வதாக கூறி அடைத்து வைத்த 3 பேர் கைது!
ஆசிய விளையாட்டு போட்டியின் 10 வது நாளில் இந்திய அணி 3 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது.
சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டியின் 10 வது நாளில் நடைபெற்ற 4 பேர் பங்கேற்கும் கலப்பு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கத்தை வென்றது. அதேபோல், மகளிர் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.
இதையும் படிக்க : கிராம சபை கூட்டத்தில் கருப்பு கொடியுடன் பங்கேற்ற மக்களால் பரபரப்பு...!
தடகளத்தில் மகளிருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் இந்தியாவின் பருல் சவுத்ரி வெள்ளிப்பதக்கமும், பிரீதி லம்பா வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர். மகளிர் டேபிள் டென்னிஸ், ஸ்பீட் ஸ்கேட்டிங்க், ரோலர் ஸ்கேட்டிங் ஆடவர் மற்றும் மகளிர் உள்ளிட்ட போட்டிகளில் இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது.
இதுவரை இந்திய அணி 13 தங்கம், 24 வெள்ளி, 23 வெண்கலம் என 60 பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் 4ஆம் இடத்தில் நீடிக்கிறது. முன்னதாக ஆடவர் ஹாக்கி போட்டியில் வங்கதேசத்தை 12-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி இன்றைய தடகளம் மற்றும் துப்பாக்கிச் சுடுதல் ஆண்கள் டிராப் குழு பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆசிய விளையாட்டின் தடகள போட்டிகளில் ஒன்றான குண்டு எறிதலில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. இன்று நடந்த ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் 20 புள்ளி மூன்று ஆறு மீட்டர் வீசி இந்திய வீரர் தஜிந்தர் பால் சிங் தங்கம் வென்று அசத்தினார்.
இதேபோல் ஆடவருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் எனப்படு்ம் தடை தாண்டு ஓட்டத்தில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. இப்போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் சாபில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதேபோல் மகளிர் 50 கிலோ எடை பிரிவு குத்துச்சண்டை அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை சுதாமத் ரக்ஷத்திடம் இந்தியாவின் நிக்ஹாத் ஸாரீன் தோல்வியடைந்தார். இதன் மூலம் அவர் வெண்கலப்பதக்கத்துடன் போட்டியிலிருந்து வெளியேறினார்.
கோல்ஃப் விளையாட்டில் தனி நபர் பிரிவில் விளையாடிய இந்திய வீராங்கணை அதிதி அசோக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
முன்னதாக நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் டிராப் பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனைகள் மனிஷா கீர், ப்ரீத்தி ரஜக், ராஜேஸ்வரி குமாரி ஆகியோர் 337 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
இதேபோல், ஆடவர் டிராப் பிரிவில் கியான் செனாய், ஜொரவர் சிங், பிரித்வி தொண்டைமான் ஆகியோர் 361 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.
இதன் மூலம் 13 தங்கம், 16 வெள்ளி மற்றும் 16 வெண்கலம் என இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. பதக்கப்பட்டியலில் தொடர்ந்து நான்காவது இடத்தில் நீடிக்கிறது.
இதையும் படிக்க : குன்னூர் விபத்து பிரதமர் குடியரசுத் தலைவர் இரங்கல்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மேலும் ஒரு தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் நடைபெற்று வரும் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று ஏழாம் நாள் இறுதியில் எட்டு தங்கம் 13 வெள்ளி 13 வெண்கலப் பதக்கங்களுடன் புள்ளிப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் இருந்தது.
எட்டாவது நாளான இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் ரைபிள் சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் சரப்ஜோத் சிங் மற்றும் திவ்யா சுப்பராஜூ வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
தொடர்ந்து, கலப்பு இரட்டையர் பிரிவு டென்னிஸ் இறுதிப் போட்டியில் விளையாடிய இந்தியாவின் ரோஹன் போபண்ணாவும், ருதுஜா போஸ்லேவும் சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினர். இதன் மூலம் இந்தியா வென்ற தங்கத்தின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க : காயமடைந்தவருக்கு சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர்...!
தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் பதக்கங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. ஆண்கள் நீளம் தாண்டுதல் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்தியாவின் ஸ்ரீசங்கர் முரளி, ஜெஸ்வின் ஆல்டிரின் ஆகியோர் பதக்கம் வெல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதேபோல், ஆடவர்களுக்கான ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அஜய்குமார் சரோஜ், ஜின்சன் ஜான்சன் ஆகியோரும் வெற்றி பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் ஜோதி யார்ராஜ், நித்யா ராம்ராஜ் இறுதிப் போட்டியில் உள்ளனர்.
உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியில், காயம் காரணமாக அவதிப்படும் ஆல் ரவுண்டர் அக்சர் படேலுக்கு பதிலாக அஷ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆசிய கோப்பை போட்டியின்போது அக்சர் படேலுக்கு காயம் ஏற்பட்டது.
உலக கோப்பையில் பங்கேற்கும் அணிகள் 15 பேர் அடங்கிய இறுதி அணியை அறிவிப்பதற்கான கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இந்திய அணியில் அக்சர் படேலுக்கு பதிலாக அஷ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
அக்சர் பட்டேல் முழுமையாகக் குணமடைய 3 வாரம் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து அஷ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆசிய விளையாட்டுப் போட்டி பதக்கப்பட்டியலில் 25 பதக்கங்களுடன் இந்தியா 5வது இடம்