
முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளருமான ரோஜர் ஃபெடரருக்கு, கடந்த 2020-ம் ஆண்டில் வலது கால்முட்டியில் இரண்டு முறை ஆபரேஷன் செய்யப்பட்டது. காயத்தில் இருந்து குணமடைந்து 5 தொடர்களில் விளையாடிய அவர் எதிலும் வெற்றி பெறவில்லை.
அதன் பிறகு மீண்டும் கால்முட்டியில் வலி ஏற்பட்டதால், ஜூலை மாதம் விம்பிள்டன் காலிறுதியில் தோல்வி அடைந்ததோடு எஞ்சிய சீசனில் இருந்து ஒதுங்கினார். இந்த நிலையில் பேட்டியளித்த 40 வயதான ஃபெடரர், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபனில் தாம் பங்கேற்க வாய்ப்பே இல்லை என கூறியுள்ளார்.