யூரோ கோப்பை கால்பந்து... அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சுவீடன், செக் குடியரசு, இங்கிலாந்து அணிகள்...

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சுவீடன், செக் குடியரசு மற்றும் இங்கிலாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

யூரோ கோப்பை கால்பந்து... அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சுவீடன், செக் குடியரசு, இங்கிலாந்து அணிகள்...
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர், 11 நாடுகளில் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஸ்வீடன் மற்றும் ஸ்லோவாகியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 77வது நிமிடத்தில் தமக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை, ஸ்வீடன் வீரர் எமில்ஸ் போர்ஸ் பெர்க் கோலாக்கினார். இறுதியில், ஸ்வீடன் அணி 1 க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் ஸ்லோவாகியாவை வீழ்த்தியது.
 
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் குரோஷியா அணி, செக் குடியரசு அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 1 க்கு 1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இருப்பினும், நாக் அவுட் சுற்றுக்கு செக் குடியரசு அணி முன்னேறியது.
 
இன்று அதிகாலை இங்கிலாந்தில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் எவ்வளவு முயன்றும் இரு அணி வீரர்களாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில், இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம், பூஜ்ஜியத்திற்கு பூஜ்ஜியம் என சமனில் முடிந்தது. ஆனாலும் இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுவாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.