ஐ.பி.எல் டி-20 போட்டி : இன்று மோதும் சி.எஸ்.கே., மும்பை அணி...

துபாயில் இன்று நடைபெற உள்ள ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி இந்தியாவில் தொடங்கியது. 29 லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், எஞ்சிய 27 லீக் ஆட்டங்கள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் ஆகியவை, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளன. அதன்படி 30-வது லீக் ஆட்டம், துபாயில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. மும்பையை வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் சென்னை அணி உள்ளது. அதே நேரத்தில் 5-வது வெற்றிக்காக மும்பை அணி காத்திருக்கிறது. காயம் காரணமாக டூ பிளஸ்ஸிஸ், கட்டாய தனிமைப்படுத்துதல் காரணமாக சாம்கரண் ஆகியோர், சென்னை அணியில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. இருப்பினும், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.