டி20 உலக கோப்பை- பாகிஸ்தானுக்கு 2-வது வெற்றி

டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

டி20 உலக கோப்பை- பாகிஸ்தானுக்கு 2-வது வெற்றி

டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஏழாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர்-12 சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகின்றன.  சார்ஜாவில் நேற்று நடைபெற்ற குரூப்-2 பிரிவு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் பாகிஸ்தான் அணி  மோதியது.  டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.  இதன்படி, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணி கட்டுகோப்பான பந்து வீச்சு மூலம் நியூசிலாந்து அணியை கணிசமாக கட்டுப்படுத்தியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி  8 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான ரிஸ்வான் 33 ரன்களுக்கும், பாபர் ஆசம் 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதன்பின் விளையாடிய பகர் ஜமன், ஹபீஸ் மற்றும் வாசிம் ஆகியோர் தலா 11 ரன்களில் வெளியேறினர்.  இதன் பிறகு ஜோடி சேர்ந்த சோயப் மாலிக் மற்றும் ஆசிப் அலி பாகிஸ்தான் அணியை வெற்றி பெற செய்தனர். அந்த அணி 18 புள்ளி 4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.