தென் ஆப்ரிக்காவுக்காவுக்கு எதிரான டி 20 கிரிக்கெட்  போட்டி.. இந்திய அணி அறிவிப்பு!

தென் ஆப்ரிக்காவுக்காவுக்கு எதிரான டி 20 கிரிக்கெட்  போட்டிக்கு, கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்ரிக்காவுக்காவுக்கு எதிரான டி 20 கிரிக்கெட்  போட்டி.. இந்திய அணி அறிவிப்பு!

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 போட்டிகள் ஜூன் மாதம் 9 ஆம் தேதி தொடங்குகிறது. தொடரின் முதல் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக இந்த தொடரில் கேஎல் ராகுலும், துணை கேப்டனாக ரிஷப் பண்டும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  இதேபோல், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, உள்ளிட்டோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரோகித் சர்மா கேப்டனாகவும், ராகுல் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். விராட் கோலி, புஜாரா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின்,  முகமது ஷமி, பும்ரா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.