இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகிறார் தல தோனி: ரசிகர்களில் வாழ்த்து மழையில் தோனி- சாக்‌ஷி!!..

தோனியின் சாக்ஷி கர்ப்பமாக இருப்பதாகவும், 2022ல் குழந்தையை எதிர்பார்த்து இருவரும் காத்திருப்பதாக ரெய்னாவின் மனைவி உறுதிப்படுத்தியுள்ளார்.
இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகிறார் தல தோனி: ரசிகர்களில் வாழ்த்து மழையில் தோனி- சாக்‌ஷி!!..
Published on
Updated on
1 min read

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனி, தற்போது வெற்றிகரமான ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ வழிநடத்தி வருகிறார்.  14வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை தன் வசப்படுத்தியிருக்கிறது தோனி தலைமையிலான படை. 

தோனியின் மனைவியான சாக்ஷியும் தனது கணவருடன் சேர்ந்து நேற்றைய வெற்றி கொண்டாட்டத்தில் அவரை இறுக்கமாக அணைத்துக்கொண்டார். அவர்களுடைய மகள் ஜிவாவும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். இந்த புகைப்படத்தில், சாக்ஷி தளர்வான மஞ்சள் ஆடை அணிந்திருப்பதைக் காணலாம். இதன் மூலம் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாரா என்ற சந்தேகங்கள் எழுந்தன. இந்த சந்தேகத்தை சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்கா உறுதிபடுத்தியுள்ளார். சாக்ஷி கர்ப்பமாக இருப்பதாகவும், 2022ல் குழந்தையை எதிர்பார்த்து இருவரும் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மட்டுமல்லாது தோனியின் ரசிகர்கள் வேறு ஒன்றிற்காகவும் தோனியை வாழ்த்தி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. தோனிக்கு ஏற்கனவே ஸிவா என்ற மகள் இருக்கும் நிலையில் தோனியின் மனைவி சாக்‌ஷி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், 2022ம் ஆண்டு அவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதாகவும் ரசிகர்கள் இதற்காக தோனியை வாழ்த்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com