ஆஸ்திரேலியா ரெக்கார்டை நாங்கதான் உடைப்போம்: ஆஸ்திரேலியாவில் தொடர் வெற்றி பயணத்தை முடித்து வைத்த இந்திய மகளிர் அணி...

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா ரெக்கார்டை நாங்கதான் உடைப்போம்: ஆஸ்திரேலியாவில் தொடர் வெற்றி பயணத்தை முடித்து வைத்த இந்திய மகளிர் அணி...

3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா ஷபாலி வர்மா, யாஸ்டிகா பாட்டியா இந்திய பெண்கள் அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், இரு அணீகளுக்கு இடையேனா கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மூனே 52 ரன்களும், கார்ட்னெர் 67 ரன்களை எடுத்தனர். இந்திய அணி தரப்பில் கோஸ்வாமி 10 ஓவர்கள் வீசி 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். பூஜா வாஸ்ட்ரகார் 46 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 265 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன்  களம் இறங்கிய இந்திய அணி, தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி 56 ரன்கள் சேர்த்தார். 3-வது வீராங்கனையாக களம் இறங்கிய யாஸ்டிகா பாட்டியா 69 பந்தில் 64 ரன்கள் விளாசினார்.தீப்தி ஷர்மா 30 பந்தில் 31 ரன்களும், ஸ்னே ராணா 27 பந்தில் 30 ரன்களும் சேர்க்க இந்தியா 49.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 26 ஒருநாள் போட்டிகளில் வென்று வெற்றிநடை போட்ட ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் பயணத்தை முடித்து வைத்தது இந்தியா மகளிர் அணி.