ரொனால்டோவின் இறுதி யூரோ கோப்பை.? கால் இறுதிக்கு கூட செல்லாமல் வெளியேறிய போர்ச்சுகள் அணி,.! 

ரொனால்டோவின் இறுதி யூரோ கோப்பை.? கால் இறுதிக்கு கூட செல்லாமல் வெளியேறிய போர்ச்சுகள் அணி,.! 
Published on
Updated on
1 min read

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் செக் குடியரசு மற்றும் பெல்ஜியம் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் லீக் போட்டிகள் நிறைவடைந்து விட்டன. இதனையடுத்து, ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் செக் குடியரசு மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.  விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த கால்பந்து ஆட்டத்தின் இறுதியில், செக் குடியரசு அணி 2 க்கு 0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. முதல் பாதி வரை இரண்டு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் இரண்டாம் பாதியில் நெதர்லாந்து வீரர் வான் டிஜிக் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற, அதன் பின் செக் அணி இரண்டு கோல்களை அடித்து நெதர்லாந்தை வீழ்த்தியது.   

இதைப்போல ஸ்பெயினின் செவில்லில் நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் பெல்ஜியம் மற்றும் போர்ச்சுகள் அணிகள் மோதின. இது நடப்பு சாம்பியனும் பலம்வாய்ந்த அணிகளுள் ஒன்றுமான போர்ச்சுக்கல்  அணி ஒரு கோல் கூட அடிக்காமல் தோல்வியை தழுவியது. ஆட்டத்தின் இறுதியில் பெல்ஜியம் அணி 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல்  அணியை வீழ்த்தி  காலிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் பெல்ஜிய வீரர் ஹசார்ட் அடித்த அருமையான கோல்  போர்ச்சுகள் அணியை வெளியேற்றியது. போர்ச்சுகள் அணி நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கு இது இறுதி யூரோ கோப்பை போட்டியாக இருக்கும் என்றும் கூறப்பட்ட நிலையில் கால் இறுதிக்கு கூட செல்லாமல் அவரின் அணி வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com