அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்த ரஷ்ய வீரர்...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி டேனில் மெட்வதேவ் பட்டத்தை தட்டி சென்றார். 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்த ரஷ்ய வீரர்...

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இறுதி போட்டியில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷ்ய வீரர் டேனில் மெட்வதேவும், தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் செர்பிய வீரர் ஜோகோவிச்சும் மோதினர்.  இந்த போட்டியில் தொடக்கம் முதலே அதிக்கம் செலுத்திய மெட்வதேவ் 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்வை வீழ்த்தி தனது முதலாவது கிராண்ட்ஸ்லாம்  கோப்பையை பெற்றார். 

இந்த போட்டியில் ஜோகோவிச் வெற்றி பெற்று இருந்தால் அதிக  கிராண்ட்ஸ்லாம்   பட்டத்தை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்திருப்பார். முன்னதாக நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இங்கிலாந்தின் இளம் வீராங்கனை எம்மா ரடுகானுவும், கனடாவின் லேலா ஃபெர்னாண்டசும் மோதினர். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில்  6-4  6-3  என்ற நேர்செட் கணக்கில் வெற்றி  பெற்று அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை  படைத்தார்.