என்னிடம் சொல்லாமலே கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டனர்: டேவிட்  வார்னர் வேதனை...

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து என்னை நீக்கியது ஏன் என்பது பற்றி விளக்கம் அளிக்கவில்லை என டேவிட் வார்னர் வேதனை தெரிவித்துள்ளார்.

என்னிடம் சொல்லாமலே கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டனர்: டேவிட்  வார்னர் வேதனை...

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர். 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் வார்னர். இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்ததால் படுதோல்வியை சந்திதது. இதனால் அவர் பாதி தொடரில் இருந்து கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ஐதரபாத அணி நிர்வாகம். அவருக்குப் பதில் நியூசிலாந்தை சேர்ந்த கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருந்தாலும் அந்த அணி லீக் சுற்றோடு வெளியேறிவிட்டது.

இந்த தொடரில் டேவிட் வார்னர் , கடைசி சில ஆட்டங்களில் உட்கார வைக்கப்பட்டார். இந்நிலையில், கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என்பது பற்றி தனக்கு விளக்கம் அளிக்கவில்லை என அவர் கூறியுள்ளார். இது குறித்து பேசிய டேவிட் வார்னர், ஐதராபாத் எனக்கு 2 வது சொந்த ஊர் போன்றது. சன் ரைசர்ஸ் அணிக்காக மீண்டும் விளையாட ஆர்வமாக இருக்கிறேன். ஆனால், சர் ரைசர்ஸ் நிர்வாகம் என்ன முடிவெடுக்கும் என்பதை பொறுத்தே அது தெரியவரும் என்றார்,

கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என்று கேட்கிறார்கள். இதற்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியவில்லை. என்னை ஏன் நீக்கினார்கள் என்று விளக்கம் அளிக்கவில்லை. இது எனக்கு ஏமாற்றமாக இருந்தது.  சன் ரைசர்ஸ் அணியில் தொடர வேண்டும் என்பதைத் தவிர வேறு எதையும் நான் விரும்பவில்லை. ஆனால், அந்த முடிவு உரிமையாளர்களிடம் இருக்கிறது என டேவிட் வார்னர் கூறியுள்ளார்.