புகழ்பெற்ற விம்பிள்டன் போட்டி இன்று முதல் தொடக்கம்

உலகின் மிகவும் பழமையான கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன் போட்டி இன்று தொடங்குகிறது.

புகழ்பெற்ற விம்பிள்டன் போட்டி  இன்று முதல் தொடக்கம்

உலகின் மிகவும் பழமையான கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன் போட்டி இன்று தொடங்குகிறது.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டுக்கான போட்டிகள் இன்று மாலை லண்டனில் தொடங்கி, வரும் ஜூலை 11ஆம் தேதி வரை நடக்க உள்ளன. இந்தாண்டுக்கான 3ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னணி வீரர்களான ரஃபேல் நடால், டொமினிக் தீம் ஆகியோர் விலகி உள்ளனர். இதனால் நடப்பு சாம்பியனான நோவாக் ஜோகோவிச் கோப்பை வெல்ல வாய்ப்பு அதிகரித்துள்ளது.

ஏற்கனவே இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் பிரெஞ்சு ஓபன் பட்டங்களை கைப்பற்றிய ஜோகோவிச் விம்பிள்டன் கோப்பையையும் வெல்லும் பட்சத்தில், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பெற்று, ரோஜர் பெடரர் மற்றும் ரஃபேல் நடால் ஆகியோரின் சாதனையை சமன் செய்வார். இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எனினும், பெடரர், சிட்சிபாஸ், மெட்வதேவ் ஆகியோர் ஜோகோவிச்சுக்கு சவால் கொடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.