முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - அயர்லாந்து அணிகள் இன்று மோதல்!

இந்தியா - அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் இன்று நடைபெறுகிறது.

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - அயர்லாந்து அணிகள் இன்று மோதல்!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் வரும் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கவுள்ளன. அதற்கான பயிற்சி ஆட்டத்திற்காக ரோகித் ஷர்மா தலைமையிலான அணி இங்கிலாந்து சென்றுள்ளது.

இந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இரண்டாம் தர அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன் முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளனில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லட்சுமண் பயிற்சியாளராக சென்றுள்ளார்.

அண்மையில் ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் அணிக்கு தலைமை தாங்கிய ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இளம் வீரர்கள் களம் இறங்கியுள்ளதால் இந்திய அணியின் வெற்றி குறித்து ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.