மலிங்காவை பின்னுக்கு தள்ளிய பிராவோ...! ஐ.பி.எல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை!!

மலிங்காவின் சாதனையை முறியடித்த டுவைன் பிராவோ..!
மலிங்காவை பின்னுக்கு தள்ளிய பிராவோ...! ஐ.பி.எல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி  சாதனை!!
Published on
Updated on
1 min read

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய மலிங்காவின் சாதனையை, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டுவைன் பிராவோ முறியடித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிராவோ, நேற்று நடந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தீபக் ஹூடாவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் புதிய சாதனையை படைத்தார்.

இதுவரை 122 போட்டிகளில் 170 விக்கெட்டுகளை வீழ்த்தி மலிங்கா முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது 153 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி பிராவோ 171 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

மேலும் ஐ.பி.எல் மட்டுமின்றி அனைத்து விதமான இருபது ஓவர் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பிராவோ என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com