”கனவு கலையும் வரை....” மீண்டும் விளையாடுவாரா ரொனால்டோ? வருத்தத்தில் ரசிகர்கள்!!!

”கனவு கலையும் வரை....” மீண்டும் விளையாடுவாரா ரொனால்டோ? வருத்தத்தில் ரசிகர்கள்!!!

உலகக் கோப்பையில் இருந்து தனது அணி வெளியேறிய பிறகு ரொனால்டோ தனியாக மைதானத்தை விட்டு வெளியேறி அழுதார்.  ரொனால்டோ உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய ஒரு நாள் கழித்து அவரது அனுபவம் குறித்த அவரது கருத்தை பகிர்ந்துள்ளார்.

எதிர்பாராத கோல்:

காலிறுதிப் போட்டியில் மொராக்கோவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவிய போர்ச்சுகல் ஃபிஃபா உலகக் கோப்பையை வெல்லும் கனவு முடிவுக்கு வந்தது. மொராக்கோவின் யூசுப் ஆன்-நெஸ்ரி 42 வது நிமிடத்தில் தலையால் முட்டி ஆட்டத்தின் ஒரே கோலை அடித்து போர்ச்சுக்கல்லின் தோல்வியை உறுதி செய்தார்.  

போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் மாற்று வீரராக களத்திற்கு வெளியே அமர்த்தப்படிருந்தார். பின்னர் மாற்று வீரராக களமிறங்கினார்.  எனினும், அவர் எந்த கோலையும் அடிக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லத் தவறிவிட்டார்.

தோல்வியும் கருத்தும்:

உலகக் கோப்பையில் இருந்து தனது அணி வெளியேறிய பிறகு ரொனால்டோ தனியாக மைதானத்தை விட்டு வெளியேறி தனியாக அழுதார்.  தோல்விக்கு ஒரு நாள் கழித்து, ரொனால்டோ உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது மற்றும் அனுபவம் குறித்து தனது முதல் கருத்தை தெரிவித்துள்ளார். 

இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு நீண்ட குறிப்பை எழுதியுள்ளார்.  37 வயதான நட்சத்திர கால்பந்து வீரர் தனது முன்னாள் கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் போர்ச்சுகல் தேசிய அணிக்காக விளையாடி பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.  ஒருபோதும் போர்ச்சுகல் மீதான தனது அர்ப்பணிப்பு ஒரு கணம் கூட மாறியதில்லை என்று அவர் பதிவிட்டுள்ளார்.

கனவு கலைந்தது:

”போர்ச்சுகல்லுகாக உலகக் கோப்பையை வெல்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சிய கனவு.  நான் போர்ச்சுகலுக்கு பல சர்வதேச பட்டங்களை வென்றுள்ளேன்.  ஆனால் எனது மிகப்பெரிய கனவு எனது நாட்டை உலகின் உச்சிக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான்.  அதற்காக நான் போராடினேன். இந்த கனவுக்காக கடுமையாக போராடினேன்.  16 ஆண்டுகளில் ஐந்து உலகக் கோப்பைப் பதிப்புகளில், நான் எப்போதும் சிறந்த வீரர்களுடனும், அவர்களின் ஆதரவுடனும், மில்லியன் கணக்கான போர்ச்சுகீசிய ரசிகர்களின் ஆதரவுடனும் விளையாடினேன்.  

அணிக்காக களத்தில் எனது அனைத்து முயற்சியையும் அர்ப்பணிப்புடன் அளித்தேன்.  நான் எப்பொழுதும் போராடினேன்.  ஒருபோதும் பின்வாங்கவில்லை.   உங்களுக்கான எனது கனவை ஒருபோதும் கைவிடவில்லை.  மன்னித்து விடுங்கள்.  என்னால் நேற்று உங்கள் கனவு கலைந்தது.” எனப் பதிவிட்டுள்ளார்.

கனவு கலையும் வரை:

மேலும், “சர்ச்சை கருத்துகளுக்கு எதிர்வினையாற்றுவது மதிப்புக்குரியது அல்ல.  நிறைய சொல்லப்பட்டிருக்கிறது.  நிறைய எழுதப்பட்டிருக்கிறது.  நிறைய யூகிக்கப்பட்டுள்ளது.  ஆனால் போர்ச்சுகல் மீதான எனது அன்பு ஒரு போதும் மாறவில்லை என்பதை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.  

நான் எப்போதும் அனைவரின் வெற்றிக்காகவும் போராடி வருகிறேன்.  எனது நாட்டிற்காக நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்.” எனவும் இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார்.  மேலும் போர்ச்சுகலுக்கு நன்றி தெரிவித்த ரொனால்டோ, "கனவு கலையும் வரை எல்லாம் நன்றாகவே இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.

மீண்டும் விளையாடுவாரா?:

தொடர்ந்து, “இப்போது அதிகம் சொல்ல எதுவும் இல்லை.  நன்றி போர்ச்சுகல்.  நன்றி கத்தார்.  கனவு நீடிக்கும் போது அது நன்றாக இருந்தது.  இப்போது ஒவ்வொருவரும் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க முடியும் என்று நம்புகிறேன்.” என ரொனால்டோ கூறியுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பதிவில் இருந்து, ரொனால்டோ தனது கடைசிப் போட்டியில் போர்ச்சுகல் அணிக்காக விளையாடிவிட்டதாகவும், இப்போது அவர் மீண்டும் விளையாட மாட்டார் எனவும் தெரிவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஏனெனில் அவர் கனவு உடைந்துவிட்டது என்று அவர் எழுதியுள்ளது ரொனால்டோ அவரது நம்பிக்கையை கைவிட்டதாக அர்த்தம் எனக் கூறியுள்ளனர்.

ரொனால்டோ சாதனை:

இந்த உலகக் கோப்பையில் ரொனால்டோ மொத்தம் ஒரு கோல் அடித்துள்ளார்.  உலகக் கோப்பையின் ஐந்து பதிப்புகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார் ரொனால்டோ. மொராக்கோவுக்கு எதிரான போட்டியிலும் ரொனால்டோ சிறப்பான சாதனை படைத்தார்.  அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையையும் சமன் செய்தார்.  இது ரொனால்டோவின் 196வது சர்வதேச போட்டியாகும்.  குவைத்தின் படேர் அல் முதாவாவின் சாதனையையும் சமன் செய்தார் ரொனால்டோ.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   இது என்ன துர்கா ஸ்டாலினுக்கு வந்த சோதனை...குடை பிடித்தது ஒரு குத்தமா?!!