விராட் கோலியா? ரோகித் சர்மாவா?.. அனல் பறக்கும் ஐபிஎல்.. முதலிடத்தை பிடிக்கப்போவது யார்?

முதல் இடத்தை பிடிக்க போகும் அந்த நபர் யார்? எதுல தெரியுமா
விராட் கோலியா? ரோகித் சர்மாவா?.. அனல் பறக்கும் ஐபிஎல்.. முதலிடத்தை பிடிக்கப்போவது யார்?
Published on
Updated on
2 min read

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. பின், களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 157 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 7 பந்துகள் எஞ்சிய நிலையில் ஆட்டத்தை கைப்பற்றியது..

இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 36 போட்டிகளில் டீம் கேப்டனாக ரோஹித் சர்மா தலைமை தாங்கி 30 போட்டிகளில் வென்று தந்துள்ளார். இந்திய கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது..

இந்த போட்டியில், ரோஹித் சர்மா 19 பந்துகளுக்கு 40 ரன்கள் அடித்து விளாசினார். இதன் மூலம் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் விராட் கோலியை வீழ்த்தி ரோஹித் சர்மா 3237 ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.

இதனையடுத்து களமிறங்கிய விராட் கோலி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 13 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து மீண்டும் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவை முந்தினார்..

தற்போது முதல் இடத்தில் குப்தில் 3299 ரன்களும், விராட் கோலி 3244 ரன்களும், ரோகித் சர்மா 3237 ரன்களும் அடித்துள்ளனர்.இந்த தொடர் முடிவதற்குள் விராட் கோலியா? இல்ல  ரோகித் சர்மாவா? யார் முதல் இடத்தை பிடிக்க போறார்கள் என பொறுத்திருந்து பாப்போம்.. அடுத்த 20 ஓவர் டி 20 போட்டி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com