"விராட் கோலி vs ரோஹித் சர்மா" கண்டிப்பா சிறந்த கேப்டன் இவர்தான்.. வாசிம் ஜாபர் பளிச் பதில்!!

இந்திய அணியின் சிறந்த கேப்டன் விராட் கோலியா? அல்ல ரோஹித் ஷர்மாவா? என்ற கேள்விக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் கூறிய பதில் என்னனு தெரியுமா?

"விராட் கோலி vs ரோஹித் சர்மா" கண்டிப்பா சிறந்த கேப்டன் இவர்தான்.. வாசிம் ஜாபர் பளிச் பதில்!!

கடந்த  சில மாதங்களுக்கு முன்பு ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விராட் கோலி, டெஸ்ட் அணியிலிருந்தும் விலகினார். இதை தொடர்ந்து ரோஹித் சர்மாவிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஆனால், இதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த முடிவு மிகவும் தவறானது என குற்றம் சாட்டி வந்தனர்.

விராட் கோலி தான் தொடர்ந்து கேப்டன் பதவியில் இருக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். மேலும் விராட் கோலி தலைமையில் இந்திய டெஸ்ட் தரவரிசையில் இந்திய நம்பர் 1 அணியாகவும், உள்ளூர் டெஸ்ட் தொடரில் வென்றும் தந்தது. ஆனால் இதுவரை ஐசிசி கோப்பையை வெல்லவில்லை. ஆனால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி புயலை கிளப்பி வருகிறது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், மேற்கிந்திய தீவுகள் என தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. மேலும் சர்வதேச போட்டியில் தொடர்ந்து 7 தொடர்களையும், 7 போட்டிகளையும் வென்று சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து அதிக டி20 போட்டிகளில் வென்ற சாதனையையும் ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

இந்நிலையில், விராட் கோலி vs ரோஹித் சர்மா.. இவர்களின் யார் சிறந்த கேப்டன் என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. இது குறித்து பதில் அளித்த வாசிம் ஜாபர்,  கோலியை விட ரோஹித் சர்மா சிறந்த கேப்டனாக செயல்படுவார். போட்டியின் முடிவுகளைப் பார்க்கும்போது கேப்டன் பதவி சரியான நபரின் கைக்கு சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ரோஹித் சர்மாவும் ஒருவர் என்ற பெருமை அவருக்கு உண்டு என அவர் கூறினார்.