பி.வி சிந்துவின் ஜாதி என்ன? கூகுளில் எத்தனை பேர் தேடினார்கள் தெரியுமா?

இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற வீராங்கனை பி.வி சிந்துவின் ஜாதி என்ன என கூகுளில் பலர் தேடியுள்ளனர். 

பி.வி சிந்துவின் ஜாதி என்ன? கூகுளில் எத்தனை பேர் தேடினார்கள் தெரியுமா?

டோக்கியோவில் ஒலிம்பிக்2020  போட்டியில்  பழுதூக்கும் போட்டியில் ஒரு பதக்கத்தை மீராபாய் சானு பெற்று தந்த நிலையில் சமீபத்தில்இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டியில் விளையாடி பேட்மின்டன் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார். கடந்த ஞாயிறு அன்று சீன வீராங்கணனையை 21-13, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். இந்தியாவில் அடுத்தடுத்து ஒலிம்பிக் பதக்கம் வென்ற 4வது பெண் என பிவி சிந்து சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அரவ் பதக்கம் வென்ற செய்தி வெளியான பின்பு பலர் இணையத்தில் பி.வி சிந்து குறித்து கூகுளில் தேடியனர். நேற்று பலர் பிவி சிந்துவின் பதக்கம் குறித்து பலர் தேடினர். பலர் சிந்துவின் கோச் குறித்து தேடினர். அதே நேரத்தில் சிந்துவின் ஜாதி குறித்து பலர் தேடியுள்ளனர். கூகுளில் அவர் ஜாதியை குறித்துதேடியவர்களின் எண்ணிக்கை 700 சதவீதம் அதிகரித்துள்ளது.

 ஆந்திரா, தெலுங்கானா, ஹரியானா, புதுச்சேரி, டில்லி ஆகிய மாநிலங்களிலிருந்து அதிகமாக பி.வி சிந்துவின் ஜாதியை தேடியதாக கூகுள் தெரிவித்துள்ளது. இதே போல கடந்த முறை ரியோ டி ஜெனிரியோவில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் சிந்து வெள்ளி பதக்கம் வென்ற போதும் பலர் பிவி சிந்துவின் ஜாதியை தேடியது குறிப்பிடத்தக்கது. பி.வி சிந்து ஜாதியை தேடிய தகவல் கூகுள் டிரென்ஸ் தளத்தில் உள்ள தகவலின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.