யார் இந்த அசிந்தா? இந்தியாவின் மூன்றாவது தங்கத்தை வென்ற வீரர் பற்றி சிறு குறிப்பு:
காமன்வெல்த் போட்டிகளில், இந்தியாவிற்கு மூன்றாவது தங்கம் பெற்றுத் தந்த பளுதூக்கு வீரர் அசிந்தா, ஒரு வேளை சாப்பட்டிற்கே கஷ்டப்பட்டிருக்கிறார். தான் பெற்ற இந்த பதக்கத்தை, தனது அண்ணனுக்கு சமர்ப்பிப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

கூட்டத்திற்கு மத்தியில், எப்போதும் தனித்துவமாகத் தெரியும் வகையில், தனது விடாமுயர்ச்சி மூலம், இன்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருக்கிறார் அசிந்தா. ஆனல், இது அவருக்கு சுலபமாக கிடைக்கவில்லை. ஒரு வேளை சாப்பாட்டிற்கே தான் கஷ்டப்பட்டதாக கூறும் அசிந்தாவின் வெற்றிப் பயணத்தைப் பார்க்கலாம்.
யார் இந்த அசிந்தா?
கொல்கத்தாவிற்கு அருகில் டியூல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அசிந்தா ஷியுலி. 2022ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் ஒரு போட்டியான பளுதூக்கல் போட்டியில், ஆண்களுக்கான 73 கிலோ எடைப் பிரிவில், 20 வயதான அசிந்தா 143 கிலோ, மற்றும் 170 கிலோ பளுக்களை க்ளீநாகத் தூக்கி, 313 கிலோ எடையோடு சாதனை படைத்து, தங்கத்தைக் கைப்பற்றினார்.
தொடக்கம்:
சுமார் 10 வருடங்களுக்கு முன்பு, தனது முதல் பளுதூக்கும் திறமையைக் கண்டறிந்தார் அசிந்தா. தனது அண்ணன் அலோக்-கிற்கு, தனது பதக்கத்தை சமர்ப்பிப்பதாகத் தெரிவித்திருந்த நிலையில், அவரது வாழ்வியல் குறித்து சிலர் கேள்வி எழுப்பினர். அப்போது தான், அவரது வறுமைப் பற்றி தெரியவந்துள்ளது.
அவரது சிறுவயது பயிற்சியாளரான் அஸ்தம் தாஸ் என்பவரது உடற்பயிற்சிக் கூடம் மற்றும் வீடாகக் கட்டப்பட்ட சிறிய இடத்தில் தான், இன்றைய இந்திய தங்கப்பதக்க வெற்றியாளர் இருந்தார் என்றால் உங்களால் நம்ப முடியுமா?
மேலும் படிக்க | ஜெரெமியைத் தொடர்ந்து, இந்தியாவின் மூன்றாவது தங்கத்தை வென்ற அசிந்தா!
அஸ்தம் தாஸ்:
“முதன் முதலில் நான் பார்த்த போது, ஒல்லியாக, சிறிய துரும்பு கூட தூக்கும் தெம்பற்ரவனாக தோற்றமளித்தான்” என, அஸ்தம் தாஸ் தனது பெருமைக்கிறிய மாணவன் குறித்து பேசினார். தனது அண்ணன் அலோக் போலவே தானும் பெரும் சர்வதேச வீரராக வேண்டும் என்று நினைத்த அசிந்தா, குடும்ப வறுமை காரணமாகவும், தங்களது தந்தை மறைந்த காரணத்தாலும், 2013ம் ஆண்டின் தெசியளாவிய போட்டிகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தோம்.
இரண்டாம் ஆண்டு கல்லூரிப் படிப்பைப் படித்துக் கொண்டிருந்த அலோக், குடும்ப சூழ்நிலை காரணமாக, பொருப்புகள் முழுவதையும் தன் தோள்களில் ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, தனது கல்லூரி படிப்பை பாதிய்லிலேயே விட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
நன்றி கடன்:
அஸ்தம் வீட்டிற்கு அருகாமையில் வாழும் அசிந்தாவின் குடும்பம், அவருக்கு மிகவும் கடமைப் பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். சிறு குடியிருப்புகள் நிரைந்திருக்கும் அ[ப்பகுதியில், ஓரளவு விசாலமான வீடாக இருப்பது, அஸ்தம் அவர்களின் வீடு தான். ஆனால், தற்போதைய போட்டிகள் காரணமாக, அதிக நேரம் அங்கு அசிந்தாவால் செலவழிக்க முடியாமல் போனது.
முன்னாள் தேசிய பளுதூக்கும் வீரராக இருந்த அஸ்தம் தாசின் பயிற்சிக்கு கீழ் இன்று வெற்றி வாகை சூடியிருக்கும் அசிந்தாவையும், அவரது சகோதரர் அலோக்-கையும், அஸ்தம் தான் வளர்த்திருக்கிறார் என பெருமை பேசுகிறார் அலோக்.
திருப்பு முனை:
பல ஆண்டு பயிற்சிக்கு பிறகு, 2014ம் ஆண்டு, ராணுவ விளையாட்டு நிறுவனத்திற்கு சென்றுள்ளார் அசிந்தா. அதுதான், அவர் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.
2013 குவஹாத்தியில் நடந்த ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப்பில் அசிந்தா, தனது சிறப்பை வெளிப்படுத்தினார். தங்களது தந்தையின் திடீர் மறைவைச் சமாளித்துக் கொண்டிருக்கும் போதே, அலோக், அசிந்தா - இருவரது உள்ளத்திலும் பளு தூக்குதலுக்கான நெருப்பு இன்னும் ஆழமாக எரிந்தது. அப்போது தான், இருவரும் 2013 இல் குவஹாத்தியில் நடந்த ஜூனியர் நேஷனல்ஸில் பங்கேற்று, அசிந்தா நான்காவது இடத்தைப் பிடித்தார் என அலோக் கூறினார்.
காமன்வெல்த் தொடக்கம்:
பின், 2015 ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளுக்கான, ஜூனியர் உலக சாம்ப்யன்ஷிப் அழைப்பு அசிந்தாவிற்கு வந்தது. ஆனால், 0.02 புள்ளிகளில், இடத்தை இழந்தார் அவர்.
தொடர்ந்து தன் விடா முயற்சி மூலம், தற்போது, 313 கிலோ பளு தூக்கி, இன்று பெரும் சாதனையை, தனது 20 வயதிலேயே படைத்ததோடு, இந்திய நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார்.
அலோக்:
தீயணைப்புத் துறையில், ஒப்பந்த ஊழியராக பணி புரியும் அலோக், தனது குடும்பத்திற்கு தேவையான அனைத்தும் செய்ய முடியாமல் தவித்து வந்தாலும், தனது சகோதரரின் கனவை, தன் கனவு போலவே நினைந்த்து போராடி இருக்கிறார். தனது ஆசை, கனவு என அனைத்தும் துறந்து, இன்று தனது தம்பியை உலகிற்கே எடுத்துக் காட்டி இருக்கும் ச்தருணத்தை நினைவுக் கோரும் வகையில், தங்கப்பதக்க வெற்றியாளர் அசிந்தா, தனது பதக்கத்தை, அலோக்கிற்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார்.
இவரது இந்த வெற்றியை அனைவரும் பாராட்டி வருவதோடு, வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.