பும்ராவுக்கு மாற்று வீரர் யார்... ரசிகர்கள் எதிர்பார்ப்பு....ரோகித் சர்மா பதில்...

பும்ராவுக்கு மாற்று வீரர் யார்... ரசிகர்கள் எதிர்பார்ப்பு....ரோகித் சர்மா பதில்...

2023-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 தொடரில்  மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக யார் களமிறங்க உள்ளார் என்ற கேள்விக்கு அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டியளித்துள்ளார்.

ஐபிஎல் டி-20யில் ஐந்து முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 2023 -ஆம் ஆண்டுக்கான தொடரில் களம் இறங்க உள்ளது. தற்போது  மும்பை அணியின் வேகப்பந்து  வீச்சாளர் பும்ரா   காயம் அடைந்ததன் காரணமாக ஓய்வு பெற்று வருகிறார். பும்ராவுக்கு பதிலாக மாற்று வீரர்  யார் களம் இறங்குவார் என ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்கள்  மத்தியில் மிகுந்த  எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ளது .

இதற்கு பதிலளித்தமும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பும்ரா இல்லாதது எங்கள் அணிக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. தற்போது பும்ராவுக்கு பதிலாக யாரைக் களமிறக்கலாம் என  ஆலோசித்து வருவதாக  தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து பேட்டியளித்த அவர் கடந்த சீசனில் காயம் ஏற்பட்டதன் காரணமாக விளையாட்டில் பங்கேற்காத வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் தற்போது நல்ல உடல் தகுதியுடன் இருப்பது எங்களுக்கு உற்சாகம் அளிப்பதாக தெரிவித்தார்.

-முருகானந்தம் 

இதையும் படிக்க :எந்த ஒரு நீதிமன்றமும் தனக்கு எதிராக தீர்ப்பளிக்க முடியாது