சென்னையுடன் மோதப்போவது யார்..? கொல்கத்தா - டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை...

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சென்னை அணியுடன் மோதப்போகும் அணியை முடிவு செய்யும் குவாலிபயர் 2வது போட்டியில் கொல்கத்தா அணியும் டெல்லி அணியும் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

சென்னையுடன் மோதப்போவது யார்..? கொல்கத்தா - டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை...

14வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பாதியில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ஐக்கிய அரபி எமிரேட்சில் மீதமுள்ள போட்டிகள் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில், லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் டெல்லி, சென்னை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. இந்நிலையில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த  சென்னை மற்றும் டெல்லி அணிகள் குவாலிபயர் முதல் போட்டியில் மோதின. 

இதில், சென்னை அணி வெற்றி பெற்று நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதனையடுத்து நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதிக் கொண்டன. இதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று குவாலிபயர் 2 வது போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் குவாலிபயர் 2வது போட்டியில் டெல்லி அணியுடன் கொல்கத்தா அணி பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இதில் வெற்றி பெறும் அணி சென்னை அணியுடன் இறுதி போட்டியில் மோதும். புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் முடித்த டெல்லி அணி பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலுமே சிறப்பாக விளங்குவதால்,  கொல்கத்தா அணி எலிமினேட்டரில் வெற்றி பெற்ற முனைப்புடன் உள்ளதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என கூறப்படுகிறது.