மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர்; சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி!

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர்; சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி!

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில், முதன் முறையாக ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

32 அணிகள் பங்கேற்ற 9-வது பெண்கள் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி, கடந்த 20-ம் தேதி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த கால்பந்து தொடரில், இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. சிட்னி நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், ஆரம்ப முதலே ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தியது. இந்த நிலையில், போட்டியின் 29-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் கார்மோனா முதல் கோலை அடித்தார்.

இரண்டாவது பாதியில் இங்கிலாந்து அணி பதில் கோல் அடிக்க தீவிர முயற்சி செய்தும், கடைசிவரை பலன் கிடைக்கவில்லை. இதனால், ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com