உலக கோப்பை செஸ் போட்டி ; முதல் சுற்று ட்ராவில் முடிந்தது...!

உலக கோப்பை செஸ் போட்டி ;    முதல் சுற்று  ட்ராவில்  முடிந்தது...!

உலகக் கோப்பை செஸ்  இறுதி போட்டியில் கார்ல்சன், பிரக்ஞானந்தா மோதிய முதல் சுற்று  டிராவில் முடிந்தது.

 10-வது உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் 35-வது நகர்த்தலுக்கு பின் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

முதல் சுற்று முடிந்த நிலையில் புதன்கிழமை இரண்டாம் சுற்று ஆட்டம் நடைபெறுகிறது. முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 2வது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடுகிறார்.

இரண்டாவது சுற்றும் டிராவில் முடிந்தால் டைபிரேக்கர் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். நிஜத் அபசோப் - ஃபேபியானோ காருவானா மோதிய 3வது இடத்துக்கான ஆட்டத்தில் முதல் சுற்றில் அபசோவ் வெற்றி பெற்றார்.

இதையும் படிக்க | தேர்தல் ஆணைய தேசிய அடையாளச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் சச்சின் ...!