உலக சிலம்ப தினம் ...!  2 மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி  சிறுவர்கள் சாதனை...!!!

உலக சிலம்ப தினம் ...!  2 மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி  சிறுவர்கள் சாதனை...!!!
Published on
Updated on
1 min read

 உலக சிலம்ப தினத்தை முன்னிட்டு உலக சாதனைக்காக நாகப்பட்டினத்தில் 2 மணி நேரம் இடைவிடாது மாணவ மாணவிகள் சிலம்பம் சுற்றினர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்ட கலை தற்போது அழிந்து வரும் நிலையில் பலர் அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சிலம்பாட்டம் கற்றுக்கொள்வதில் குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

அதன்படி இன்று உலக சிலம்ப தினம் மற்றும் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடியில் நாகை வீரத்தமிழன் சிலம்பம் கலைக்கூடம் மற்றும் யுனிவர்சல் அச்சுவேர்ஸ் புக் ரெக்கார்டர் ஆகியவை இணைந்து ஐந்து வயது முதல் 16 வயது வரை உள்ள 120 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சுமார் 2 மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றும் நிகழ்வை ஏற்படுத்தினர்.

இதில் பங்கேற்ற மாணவ மாணவிகள் அதிரடியாக ஒலித்த சினிமா பாடல்களுக்கு ஏற்ப ஆர்வத்துடன் சிலம்பம் சுற்றினர். இதில் மாணவர்களில் சிலர் பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடி கொண்டும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.  இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தனியார் ஐஏஎஸ் அகாடமி பயிற்சி சார்பில் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி வழங்கினர்.

சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சியில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து கைதட்டி மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தினர். மேலும் நாகையில் 120 மாணவ மாணவிகள் இடைவிடாது 2 மணி நேரம் சிலம்பாட்டம் சுற்றி அசத்திய சாதனை முயற்சிக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com