ஐபிஎல் தொடர் முடிவடைந்ததை அடுத்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா தொடர் ரசிகர்களின் பக்கம் திரும்பியுள்ளது. ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கும் இந்த தொடர் வரும் ஜூன் 9ஆம் தேதி முதல் ஜூன் 19ஆ தேதி வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறும்.
இதில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ், ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் இல்லை.. இருப்பினும் கே.எல்.ராகுல் தலைமையில் இளம் வீரர்கள் கலத்தில் இறங்குகின்றனர். இதில் பேட்டிங் தூணாக ஹர்திக் பாண்ட்யா பார்க்கப்படுகிறார்.
காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறமா இருந்த ஹர்திக் பாண்ட்யா, டி20 தொடரில் நல்ல கம்பேக் கொடுத்துள்ளார். 15 போட்டிகளில் 487 ரன்கள் எடுத்தார். இவரின் பேட்டிங் சிறப்பாக இருந்ததன் காரணமாக உலகக்கோப்பையில் நிச்சியம் இவர் இடம்பெறுவர் என தெரிகிறது.
இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யாவை அணியில் சேர்க்க வேண்டாம் என ரவிசாஸ்திரி கூறியுள்ளார். இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா ஒரு பேட்ஸ்மேனா அல்லது ஆல்ரவுண்டரா என்பது தெரியவில்லை. அவர் 2 வீரர்களின் செயல்களை அவரால் செய்ய முடியும். ஆனால் டி20 கிரிக்கெட்டில் மட்டுமே அவரை பயன்படுத்த வேண்டும்.
டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியாவைப் பயன்படுத்தினால் மட்டுமே அவர் டி20 உலகக் கோப்பைக்கு உதவுவார். ஒரு நாள் கிரிக்கெட்டில் பாண்டியாவை தேவையில்லாமல் பயன்படுத்த முயற்சிக்காதீர்கள். அதுவே மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும். பந்துவீச்சின் அழுத்தத்தால் மீண்டும் எதுவும் நடக்கலாம். எனவே அவரை தொடர்ந்து அதே பார்மட்டில் பயன்படுத்துங்கள், உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.