ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு

ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.  
ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு

ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐபிஎல் டி20 தொடரின் எஞ்சியப் போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்து 14-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள், 4 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 29 போட்டிகள் முடிந்த நிலையில், எஞ்சியப் போட்டிகள் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது.

இந்நிலையில் எஞ்சிய 31 ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடத்த கடந்த வாரம் நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பேசிய பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ஐபிஎல் போட்டிகள் அமீரகத்தில் செப்டம்பர் 19 தொடங்கி அக்டோபர் 15 வரை நடைபெறும் எனவும், ஐபிஎல் போட்டியின் தேதிகளால் டி20 உலகக் கோப்பை பாதிக்கப்படாது எனவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com